- அநுர குமார திசாநாயக்க
செப்டெம்பர் 21 ஆந் திகதி , புதிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை.தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும்.
பெரும்பாலானமக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் , ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்து வர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும். 2015 இல் தோல்வி கண்ட ராஜபக்ஷாக்கள் மீளவும் எழுச்சிபெற்றது இந்த இனவாதத்தினாலேயாகும். ஊழல், மோசடி, ஜனநாயகம், தேசிய ஒற்றுமை போன்ற விடயங்கள் இங்கு கவனத்தினை பெறவில்லை. 2019 ஏப்ரல் 19 ஆந் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தினத்திலேயே , கோட்டாபய வெற்றிபெறுவது உறுதியாயிற்று. அதற்கான காரணம் இனவாதமாகும்.இனவாத அரசாங்கங்கள் இனவாதத்தின்படி நடந்துகொள்வதால், மேலும் வேதனைகள் அதிகரிக்கும். அதனால் இனவாதத்திற்கு கட்டுப்படாத இனவாதத்தை நிகழ்ச்சி நிரலில் கொண்டிராத அரசாங்கமொன்றை அமைத்திட வேண்டும்.
தெற்கின் பெரும்பான்மை சிங்கள மக்கள் திசைகாட்டியுடனேயே இருக்கிறார்கள். தெற்கு. சபரகமுவ, மேற்கு, வடமத்திய, மத்திய, வடமேல் ஆகிய எல்லா மாகாணங்களிலும் பெரும்பான்மை மக்கள் எங்களைச் சுற்றியே இருக்கிறார்கள். இந்த தடவை தேசிய மக்கள் சக்தியை தெரிவுசெய்து கொள்ளுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். நடைபெறப்போவது ஜனாதிபதி தேர்தலாகும். இப்போது தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளை அளித்து பொதுத்தேர்தல் வந்ததும் உங்கள் பிரதேசத்திற்கு அவசியமான உறுப்பினர்களைத் தெரிவுசெய்து கொள்ளுங்கள். ஆனால் அவ்வாறு தெரிவுசெய்யும்போதும் சரியானவரைத் தெரிவுசெய்யுங்கள்.
ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களிடம் கொள்கைகள் கிடையாது, விடயங்கள் கிடையாது, அதனால் சேறு பூசிக்கொண்டு, குறைகளைக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் சிங்களப் பிரதேசங்களுக்குச் சென்று வந்தால் பெரஹெராவை நிறுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் வந்ததும் தானம் வழங்குவதை நிறுத்திவிடுவதாக ஒருசில பிக்குமார்கள் கூறுகிறார்கள். சிங்கள மக்களிடம் அவ்வாறுகூறி முஸ்லீம் பிரதேசங்களுக்கு வந்ததும் “எங்கள் அரசாங்கத்தின்கீழ் நீங்கள் ஐந்துவேளை தொழுவதை நிறுத்துவதாக” கூறுகிறார்கள். வர்த்தகம் செய்ய இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள். தாடி வளர்க்க இடமளிக்கமாட்டோமெனக் கூறுகிறார்கள்.
தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம். எமது நாட்டு அரசியல் மேடைகளில் இனிமேலும் இனவாத கோஷங்களை எழுப்ப இடமளிக்கக்கூடாது. தேசிய மக்கள் சக்தியின் மேடையிலும் வேறு எந்த இடத்திலும் இனவாதக் கூற்றுகளை விடுக்க எமது அரசாங்கம் இடமளிக்க மாட்டாது. அவ்விதமாக தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்புகின்ற அரசாங்கமொன்றை நாங்கள் உருவாக்குவோம்.
அதைப்போலவே திருட்டுகளை நிறுத்தி இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். திருட்டினை நிறுத்தினால் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய வீதிகளை அமைக்கலாம். கடந்த காலத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்ஜெக்ஷன் எனக்கூறி எமது நாட்டுக்குகொண்டுவந்த தண்ணீரை நோயாளிகளுக்கு ஏற்றினார்கள். இவ்வாறான திருட்டு, ஊழல், விரயத்தை தடுத்துநிறுத்துகின்ற அரசாங்கமொன்றை அமைத்திடவேண்டும். சஜித்தால் அவ்வாறான அரசாங்கமொன்றை அமைக்க முடியுமா? திருட்டுகளை நிறுத்துவதற்காக சஜித்திற்கு புள்ளடியிடுவதில் பலனில்லை. ரணிலுக்கு புள்ளிடியிடுவதாலும் பலனில்லை. இவ்வளவு திருடியிருக்கும்போது வாக்குகளை அளித்தால் அவர்கள் திருடினால் பரவாயில்லை என்று நினைப்பார்கள். எனவே நீங்கள் திருட்டுகளுக்கு எதிரானவர்கள் என்றால் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களிக்கவேண்டும்.
திருடியவர்கள் தண்டிக்கப்படவும் வேண்டும். திருடர்களை பிடித்து கோல்பேஸ் மைதானத்திற்கு கொண்டுவந்து தோலை உரிப்பதாக 1994 இல் சந்திரிக்கா கூறினார். விஜேபால மெண்டிஸ் அரசாங்கத்தின் தென்னந்தோட்டங்களை கள்ளத்தனமாக எழுதிக்கொண்டமைக்காக தண்டனை வழங்குவதாகக் கூறினார். இரண்டு மூன்று வருடங்கள் கழிந்ததும் அவருக்கு அமைச்சர் பதவியைக் கொடுத்தார். 2015 இல் எயார்போர்ட்டை மூடுவதாக மைத்திரிபால சிறிசேன கூறினார். மூன்று வருடங்கள் கழியும்போது மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷவிற்கு சட்டவிரோதமாக பிரதமர் பதவியைக் கொடுத்தார். மத்திய வங்கியை உடைத்த ரணில் விக்கிரமசிங்கவை சிறையில் அடைப்பதாக 2019 இல் கோட்டாபயவின் மேடையில் கூறினார்கள். அதற்காக நீங்கள் புள்ளடியிட்டாலும் இரண்டு மூன்று வருடங்களாகும் போது ஜனாதிபதி பதவியைக் கொடுத்தார்கள். அதனால் கள்வர்களைத் தண்டிப்பதற்கான அரசாங்மொன்றை அமைக்கவேண்டும். அதற்காக ரணிலுக்கு சஜித்திற்கு வாக்களிப்பதில் பயனில்லை.
இத்தடவை தேசிய மக்கள் சக்திக்கே புள்ளடியிட வேண்டும். திருட்டுகளை நிறுத்துவது மாத்திரமல்ல, திருடியவர்களுக்கு தண்டனை வழங்குவது மாத்திரமல்ல, திருடிய சொத்துக்களையும் பறிமுதல் செய்வோம்.நானோ எமது உயர்பீடத்தில் இருப்பவர்களோ தொழில்முயற்சிகளில் ஈடுபடப்போவதில்லைநாங்கள் வாக்குகளைக் கோருவது அதற்காகவே. அதுமாத்திரம் போதுமானதாக அமையமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தையும் சீராக்க வேண்டும்.
அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பார் லயிஷன் கொடுக்கிறார்கள். ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அவரது சகாக்களுக்கும் சஜித்தை சேர்ந்தவர்களுக்கும் பார் லயிஷன் பகிர்ந்தளித்தார். அதைப்போலவே பெற்றோல் ஷெட் பகிர்ந்தளித்தார். இரத்தினபுரியில் இரத்தினக்கல் சுரங்கங்களை அகழ்பவர்கள் அரசியல்வாதிகளே. மணல் பேர்மிற் வாங்குபவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களே. கிழக்கின் கடற்கரைப் பரப்பில் ஹோட்டல் அமைப்பவர்களும், கற்குழிகளை பேணிவருபவர்களும் அரசியல்வாதிகளே. நாங்கள் அவற்றைப் புரிவதற்காக வரப்போவதில்லை. இந்த நாட்டில் தொழில்முயற்சிகளில் ஈடுபடவேண்டியவர்கள் நீங்களே. அவற்றை முன்னேற்றுவதற்கான உதவிகளை செய்வதையே எமது அரசாங்கம் செய்யும்.
அறவிட்ட வரித்தொகைககள் எவ்வாறு ஈடுபடுத்தப்பட்டன என்பதை பற்றிய செய்தியை போஃனுக்கு எஸ்.எம்.எஸ். மூலமாக அறிவிக்கின்ற சிஷ்ஸ்டமொன்றை ஒரிரு வருடங்களில் கட்டியழுப்புவோம். கல்விக்காக, சுகாதாரத்திற்காக, பாதுகாப்பிற்காக, வீதிகளை அமைப்பதற்காக ஈடுபடுத்திய விதத்தை விபரங்களுடன் முன்வைப்போம். தேசிய ஒற்றுமையை உருவாக்குகின்ற, திருட்டுகளை நிறுத்துகின்ற, வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றுகின்ற அரசாங்கமொன்றை கட்டியெழுப்புவதற்கான தொடக்கத் திகதி அடுத்த 21 ஆந் திகதியாகும்.
நீங்கள் 21 அந் திகதி தெரிவு செய்வது புதிய அரசாங்கத்தையா? பழைய பாதையிலேயே போகப்போகிறீர்களா? எம்மால் விடயங்களை தெளிவுபடுத்த மாத்திரமே முடியும். எனினும் ஊரிலுள்ள வாக்குப்பெட்டிகளை திசைகாட்டிக்கு புள்ளியிட்ட வாக்குளால் நிரப்பவேண்டியது நீங்கள்தான். நாட்டை வறுமையாக்கிய திருடர்களை விரட்டியடிக்க உகந்த தருணம் இதுவே. நாட்டை வளமாக்குகின்ற அரசாங்கமொன்றை அமைக்ககூடிய தருணம் இதுவே.
0000