திறைசேரிக்கு நட்டத்தை ஏற்படுத்திய, இலங்கை அரச 7 அபிவிருத்தித் (?) திட்டங்கள்.

  • கொழும்பில் நிர்மாணிக்கப்பட்ட தாமரைக் கோபுரத்தின் மூலம் திறைசேரிக்கு 113 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டு இருந்தது.
  • மாத்தறை தொடக்கம் மாத்தளை (Matara to Matale) வரையான நீள விரைவுச்சாலை Project மூலம் 180 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டு இருந்தது.
  • மத்தள விமான நிலையம் நிர்மாணிக்கப்பட்டதன் காரணமாக 209 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டு இருந்தது.
  • அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் மூலம் 1300 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டு இருந்தது.
  • சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் மூலமான நட்டம் அறிவிக்கப்படாத போதும் ரூபா 4.5 பில்லியன் செலவு என கணக்கிடப்பட்டிருந்த போதும் உண்மையான செலவு வெறும் ரூபா 852 மில்லியன் மட்டுமே என கண்டறியப்பட்டுள்ளது. இவ் இழப்புகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய ராஜபக்சே குடும்பம் சார்பில் யாருமே நீதியின் முன்னிலையில் இதுவரை நிறுத்தப்படவில்லை.
  • ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திற்கு வந்த பின்னர் மன்னார்,பூநகரி காற்றலை மின் ஒப்பந்தங்கள் இந்தியா வர்த்தகர் அதானிக்கு வழங்கப்பட்டதன் மூலம், அரசின் திறைசேரிக்கு 1,350 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் இழப்பு ஏற்பட்டு இருந்தது.
  • விமான நிலைய விசா கையாளுதல் நடைமுறைகளை VFS Gobal லிடம் ஒப்படைத்தன் மூலம் திறைசேரிக்கு 948 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.நல்லாட்சி காலத்தின் பிணை முறி மோசடிகளுடன் ஒப்பிடும் போதும் மேற்படி Visa Scam, Wind Scam (Adani) மூலம் மட்டும் பல மடங்கு இழப்பு வெறும் இரண்டு ஆண்டு காலத்தில் ஏற்பட்டுள்ளது. அதாவது ரூபா 685 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
  • இந்த ஆண்டு (2024) கல்விக்கு வெறும் ரூபா 181 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
  • கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வெறும் ஒரு சில நூறு பில்லியன்களை செலவிடும் இலங்கைத் தீவு அரசியல் தலையீடுகள் , மோசடிகள், வினைத்திறனற்ற நிருவாகம் காரணமான அபிவிருத்தி திட்டங்களில் மட்டும் பல பில்லியன் இழப்புகளை ஆண்டு தோறும் சந்திக்கின்றது. ஆகவே இலங்கைத் தீவு Fixing governance deficit, Installing management systems,Improving transparency Strong oversight and accountability mechanism போன்ற மிக பல மாற்றங்களை வினைத்திறனான அரச நிர்வாகத்திற்கு செய்ய வேண்டி இருக்கிறது. அதாவது முழுமையான கட்டமைப்பு மாற்றம் ஒன்றை செய்ய வேண்டும் இதற்கு முதலில் ரணில் மற்றும் ராஜபக்சே கும்பல்கள் களத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். இல்லையேல் இலங்கை மீள்வதற்கான வாய்ப்புகள் ஏதுமில்லை .
  • சிவராஜ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *