நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடியில் திறைசேரிக்கு ரூபா 19.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டது
நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வாகன இறக்குமதிக்கான வரி சலுகை மோசடியால் பொது நிதிக்கு ரூபா 7 பில்லியன் இழப்பு ஏற்பட்டது
கோத்தபாயா ராஜபக்சேவின் வரி சீரமைப்பு மோசடிகளால் திறைசேரியின் வருமானம் ரூபா 600 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது
கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது நடந்த சீனி இறக்குமதி வரி மோசடியில் ரூபா 16 பில்லியன் வருமான இழப்பு அரசுக்கு ஏற்பட்டது
அதே கோத்தபாயா ராஜாபக்ச அதிகாரத்தின் கீழ் வெள்ளை பூடு இறக்குமதி (Garlic) மோசடியில் ரூபா 7.4 பில்லியன் இழப்பு ஏற்பட்டது
கோத்தபாயா ராஜாபக்ச அதிகாரத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட தரமற்ற உர இறக்குமதி காரணமாக 6.9
மில்லியன் அமெரிக்கா டொலர்கள் இழப்பீடாக செலுத்தப்பட்டது
கோத்தபாய ராஜபக்சவின் 100,000 KM நீளமானவீதிகள் புனரமைப்பு திட்டத்தில் அரச நிதிக்கு 30,000 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது
X-Press Pearl இழப்பீட்டு நடைமுறைகளில் நடைபெற்றசடிகளில் 6.2 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் நட்டம் ஏற்பட்டது
மக்கள் வங்கியில் கடன்களை பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் திரு தயா கமகே, திரு அர்ஜுன் அலோசியஸ் உட்பட்ட அரசியல் வாதிகள் மற்றும் அரசியலுக்கு நெருக்கமான வியபாரிகளின் ரூபா 54 பில்லியன் கடன்கள் (Bad Loans) மீள செலுத்தப்படவில்லை
திரு ரணில் விக்ரமசிங்கே அதிகாரத்திற்கு வந்த பின்னர் நடைபெற்ற சீனி இறக்குமதி மோசடியில் ரூபா 1,000 மில்லியன் இழப்பு அரச திறைசேரிக்கு ஏற்பட்டது.
திரு ரணில் விக்ரமசிங்கே அரசாங்கம் $0.0488 per KW கேள்வி மனுவை சமர்ப்பித்த Windforce நிறுவனத்தை தவிர்த்து $0.0826 கேள்வி மன்னுகோரலை சமர்ப்பித்த Adani யின் நிறுவனத்தோடு மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்த காரணத் தினால் திறைசேரிக்கு US cents 3.38 per KW (69% over cost) இழப்பு ஏற்பட்டது
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் அதிகாரத்தின் கீழ் எவகேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் விசா சேவையை வழங்க VFS Global அனுமதிக்கப்பட்ட காரணத்தினால் 2.6 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் இழப்பு ஏற்பட்டது
இது தவிர,மஹிந்த ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது நடைபெற்ற மிஹின் லங்கா விமான மோசடியில் ரூபா 13 பில்லியன் நஷ்டம் இலங்கை பொது நிதிக்கு ஏற்பட்டது
அதே காலப்பகுதியில் நடந்த Airbus மோசடியில் ரூபா 14,000 மில்லியன் இழப்பு அரச திறைசேரிக்கு ஏற்பட்டது
கட்டுநாயக்க விரைவு சாலை நிர்மாணத்தில் கிலோமீட்டர் ஒவ்வொன்றுக்கும் தலா ரூபா 1பில்லியன் இழப்பும் Kandy- Colombo விரைவுச்சாலை நிர்மாணத்தில் ரூபா 50 பில்லியன் இழப்பும் பொது நிதிக்கு ஏற்பட்டது
இது தவிர ராஜபக்சே குடும்பம் நேரடியாக தொடர்புபட்ட Mattala Rajapaksa International Airport ,Hambantota Port Project,Divineguma Fund Misuse,Stock Market Manipulation.Misappropriation of Tsunami Funds,Lotus Tower Project,Military Procurement Scandals போன்ற தளங்களில் நடைபெற்ற மோசடிகளில் ரூபா பல பில்லியன் இழப்பு திறைசேரிக்கு ஏற்பட்டது
ஆனால் மேற்படி மோசடிகள் தொடர்பானவர்கள் மிக தெளிவாக அடையாளம் காணப்பட்ட போதும் யாருமே இதுவரை நீதி கட்டமைப்பின் முன் நிறுத்தப்படவில்லை
திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் ஊழல் மோசடி வழக்குகளில் சிக்கியிருந்த ராஜபக்சே குடும்பத்தை மிக ம தெளிவாக காப்பாற்றியிருந்தார்
குறிப்பாக அவன்காட் மோசடி வழக்கிலிருந்து கோட்டாபய ராஜபக்சே அவர்களை திரு ரணில் விக்ரமசிங்கே காப்பாற்றியதால் தான் அவர் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியானார்
அதே போல நாமல் ராஜபக்சே சிக்கியிருந்த பல்வேறு Money Laundering வழக்குகளிலிருந்து அவரை திரு ரணில் விக்ரமசிங்கே காப்பாற்றியதால் தான் அவர் தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றார்
மறுபுறம் திரு ரணில் விக்ரமசிங்கே தொடர்புபட்ட பிணைமுறி மோசடி விசாரணைகளை ராஜபக்சே குடும்பம் நீர்த்து போக செய்த காரணத்தினால் அவர் ஜனாதிபதியாகி தற்போது 2 ஆம் தடவை போட்டியிடுகின்றார்
ஆகவே இந்த கூட்டு களவாணிகளை அரசியல் அரங்கிலிருந்து தோற்கடிக்காமல் இங்கு Goverance Reforms க்கு வாய்ப்பில்லை
Goverance Reforms வின்றி இலங்கை தீவும் முன்னேற போவதில்லை