மத்திய காசாவின் நுசிராட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல தசாப்தங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மிகத் தீவிரமான இராணுவத் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலியப் படைகள் ஜெனின் நகரை முற்றுகையிட்டுள்ள நிலையில் பலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் உணவு, நீர் மற்றும் மின்சாரம் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வசதிகள் எதுவும் இல்லையென கூறப்படுகின்றது.
இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதலின் நான்காவது நாளில் முற்றுகையிடப்பட்ட அகதிகள் முகாமில் உள்ள பலஸ்தீனியர்களுக்கான உதவிக்கான அணுகலைத் தடுத்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ஜெனினில் சோதனைகளை நடத்தி வருகிறது.
ஜெனின் அகதிகள் முகாமின் புறநகரில் இஸ்ரேலிய வீரர்கள் பலர் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் ஹமாஸ் மோதல் ஆரம்பமானதிலிருந்து இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,855 ஆக உயர்வடைந்துள்ளது.