விண்வெளியில் அப்படி என்னதான் நடக்கின்றது என்பதை தொடர்ந்தும் வானியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு ஒளிவீசும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
(ESO) VLT எனும் தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
நட்சத்திரங்கள் சூழ நடுவில் கருந்துளையைக் கொண்டுள்ள இதனை குவாசர்ஸ் என அழைக்கின்றனர்.
இதன் நடுவிலுள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்படுகின்றது.
கருந்துளைகளை காற்று மற்றும் தூசிகள் அண்மிக்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே அதன் அதிகபட்ச ஒளிக்கு காரணம்.
இக் குவாசருக்கு J0529-4351 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த குவாசர் பூமியிலிருந்து வெகு தூரம் இருப்பதால் அதன் ஒளி நம்மை வந்தடைய 12 பில்லியன் வருடங்களுக்கும் மேல் எடுத்துக்கொண்டதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.