_
தொழிற்சங்க நடவடிக்கை என்பது யாப்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஜனநாயக உரிமையாகும்.ஏறக்குறைய இலங்கையில் 16 லட்சம் அரச ஊழியர்கள் இருக்கின்றனர்.
மத்திய வங்கி முதல் சகலதுறைகளிலும் எடுத்த களவினால்
மக்களை கொதிக்கும் வெயிலில், ஆண் பெண்,
குழந்தைகள் என்ற பேதம் இல்லாமல் நாள் முழுவதும் வரிசையில் கொண்டு போய் நிறுத்தினார்கள்.
மக்கள் வீதியில் உண்டு, உறங்கி எழுந்தார்கள். சிலர் வரிசையிலேயே மரணித்துப் போனார்கள்.பின்பு வரிசையை உருவாக்கியவர்களே வெளி நாடுகளில் இருந்தும் சர்வதேச நிதி முகவர்களிடமிருந்தும் கடனை வாங்கி, வரிசையை இல்லாமல் செய்தார்கள்.அதாவது தாங்கள் களவெடுத்ததனால் வந்த தட்டுப்பாட்டை நீக்குவதற்காக கடன் வாங்கி, அந்தக் கடனை களவுக்கு துளியும் காரணமில்லாத நம் மீது (மக்கள்) சுமத்தி இருக்கிறார்கள்.
தாங்க முடியாத வரியாகவும்
பொறுக்கமுடியாத விலையாகவும், இன்று அரை கால் வயிறாக உணவைக் குறைத்து , உடையை குறைத்து , மருந்தை குறைத்து , படிப்பை குறைத்து , பயணத்தை குறைத்துவாழும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்.
களவெடுத்தவர்கள்
தங்களுக்குத் தோதாக ஒரு காவலனைத் தேர்ந்தேடுத்து வாசலில் வைத்துவிட்டு,
அதே சுகபோக வாழ்க்கையை தொடர்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குற்றம் இழைக்காத நாம் , தண்டனையை பெற்று நாள் தோறும் வாடி வதங்கி கொண்டிருக்கின்றோம்.
650/- தண்ணி பில் கட்டிய நாம் 2600/- கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.
1400/- கரண்ட் பில் கட்டிய நாம் 3400/- கட்ட நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றோம்.
இன்று பொழுது விடிந்தால் உணவு உண்கின்றோமோ இல்லையோ…
மருந்து குடிக்கிறோமோ இல்லையோ, பிள்ளைக்கு படிப்புக்கு செலவளிக்கின்றோமோ இல்லையோகரண்டுக்கும் தண்ணிக்கும் காசை எடுத்து வைத்துவிட்டுத்
தான், உணவுக்கு என்ன செய்யலாம் என்று கன்னத்தில் கைவைக்க வைத்திருக்கின்றார்கள் ஏழை மக்கள்.
.
76 ஆண்டுகள் இந்த நாட்டை எப்படி ஓட்டி , சுரண்டி வந்தார்களோ…….!
எப்படி ஓட்டிப் பழகினார்களோ……!
மேலும்
#அப்படியே, சுரண்டி _ஓட்டிச்செல்ல மீண்டும் வேசமிட்டு வாய்ப்புக் கேட்டு நிற்கின்றார்கள்.
மும்மடங்கு நான்குமடங்காக ஏற்றப்பட்ட வரி , மற்றும் விலையின் சுமை முதுகை ஒடிக்க,
சுமை தாங்க முடியாத நிலையில்
அரச ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகயில் இறங்கிய போதுஅவர்களுடைய மண்டையை உடைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு,
அன்று தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட முன்வராத ஒரு சில ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவை கொடுத்து, இந்த நாட்டின் 16 லட்சம் அரசு ஊழியர்களையும்
அவர்களது போராடும் ஜனநாயக உரிமையையும் கேவலப்படுத்தினார்கள்.
பத்தாயிரம் ரூபாய் அதிகரிப்பு கேட்டதற்கு மண்டையை உடைத்து அனுப்பியவர்கள், இப்போது தன்னை வெல்ல வைத்தால் 25 ஆயிரம் ரூபாய் தருவதாகதெருவில் நிற்கும் வியாபாரி போல் ,
தரகர்கள் ஊடாக ( இவர்களுடன் சேர்ந்திருக்கும் கட்சிகள்) விலை பேசுகின்றார்கள்.
இத்தனை இழிவுபடுத்தல்களுக்கும்
அவமானப்படுத்தல்களுக்கும், பாடம் கற்பிக்க, பதிலடி கொடுக்க
அரச ஊழியர்களின் கைகளிலே தற்பொழுது தபால் வாக்குகள் கிடைத்திருக்கின்றன.
நமது தாய் திரு நாட்டை 76 ஆண்டு காலம் எவ்வாறு நடாத்தி வந்தார்களோ,
எவ்வாறு நடாத்திப் பழக்கப்பட்டார்களோ அவ்வாறே நடாத்திச் செல்ல அனுமதி கேட்டு நிற்பவர்களுக்கு கற்றசமூகம், அரச உழியர்கள் தமது வாக்குகளை வழங்காது,
எதிர்கால இலங்கை புதிய பாதையில் புறப்பட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக
அதன்
#மங்களகரமான_ஆரம்பமாக
தமது தபால் வாக்குகளை பயனுள்ள வகையில் பிரயோகித்து ஆரம்பித்து_வைப்பார்கள் என்று , பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள்.
00000
- மூதூர் நேசன்