தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களிடையே

ஆதாரவைப் பெறும்  தோழர் அனுர

  • —-நிதால்

ன்றுமில்லாத வகையில் , எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபியின் தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமாரவுக்கு தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களிடையே ஆதரவு பெருகி வருகின்றது. இந்த உண்மையை  மக்களே பேசியும், எழுதியும் நேரடியாகவும் தெரிவித்தும்  வருவதை சமூக வலைத்தளங்களிலும் ,சுயாதீன  ஊடகங்களிலும்  காணக் கூடியதாக உள்ளது. இது  நம் கண் முன்னே நமக்கு முன்னுள்ள முதலாவது சாட்சியமாகும்.  

இந்த சாட்சியமொரு முதல் வெளிப்பாடு என்றால், இந்த ஆதரவு உணர்வும் அலையும் தங்களது வாக்காளர் மட்டத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாகவும், இதனை ஜீரணிக்க முடியாத நிலையில் தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களிடையே உள்ள கட்சிகளின் தலைவர்களும், அதன் பிரதேச அரசியல் முகவர்களும் ,என்றுமில்லாத வகையில் ,  தேசிய மக்கள் சக்தியின் மீதும் தோழர் அனுர

மீதும் நாளுக்கு நாள் அபாண்டத்தினையும் , வீண்பழிச் சொற்களையும் அவதூறாகவும், திரித்தும் உளறத் தொடங்கி விட்டனர்.  இவர்களின் இந்த பதற்றமிகு செயற்பாடுகள் , இரண்டாவது சாட்சியமாகும். 

”அனுர குமார மீதும் நியாயமான அரசியல் விமர்சனங்களை வைக்க வேண்டாம் என இங்கு சொல்ல வரவில்லை. இக்கட்டுரையாளருக்கும் , எங்களுக்கும் சில விமர்சனங்கள் உள்ளது

ஆதாரபூர்வமானதும், அரசியல், சமூக மதிப்பீடுகளுடன் கூடிய விமர்சனங்கள் வைக்கப்படல் வேண்டுமேயொழிய, இத் தலமைகளும், இவர்களது ஆதரவாளர்களும் இதுவரை வைத்துவரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, இவர்களது பதற்றமும் நடுக்கமும் நன்கு வெளித் தெரிகின்றன. ”

இந்த கட்சிகளின் தலைவர்களினதும், அதன் பிரதேச முகவர்களதும் பிரச்சினைதான் என்ன ? இந்த அவதூறுகளுக்கும் திரிபுகளுக்கும் பின்னால் உள்ள விடயம் என்னவெனில் , உண்மையில் தமது ஆதரவாளர்கள்,  நாளுக்கு நாள் இந்தத் தேர்தலில் இவர்கள் ஆதரித்து நிற்கின்ற சஜித், ரணிலை விடவும், தேசிய மக்கள் சக்தியின்  அரசியல் உத்தரவாதங்களும் தோழர் அனுர மீதான நம்பிக்கையும்    ,  ஆதரவு  முன் வருகையாக தமிழ் முஸ்லிம் ,மலையக மக்கள்  மத்தியில் இருந்து வருவதேயாகும். 

யாழ்ப்பாணம் தொடக்கம்  பொத்துவில் வரைக்கும், புத்தளம் தொடக்கம் காலி, இரத்தினபுரி வரைக்குமான தமிழ் முஸ்லிம் ,மலையக மக்கள்  வாழும் பகுதிகளில், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள், அரசியல் தெளிவுள்ள சமூக ஜனநாயக சக்திகள் தமது தெரிவு மற்றும்  அபிப்பிராயங்களுடன் மட்டும் நில்லாது, வீதிகளிலும், தொழிலிடங்களிலும் தேசிய மக்கள் சக்திக்கும்,   தோழர் அனுரவின் வெற்றிக்கும் வேலை செய்யத் தொடங்கி விட்டனர். 

மக்களின்  இந்த மாற்றத்திற்கும், தெளிவிற்குமான  பிரதான காரணம், இதுவரை தமது சொந்த மக்களை ஏமாற்றி வந்த, ஊழலிலும், துஸ்பிரயோகத்திலும் மோசடிகளிலும் பெயர் பெற்று  , தங்களது சுயநலன்களை  தென்னிலங்கை  பெரும் கட்சிகளுடன் சேர்ந்து , காலத்திற்கு காலம் மாற்றி மாற்றிப் பேசி  பெரும் பணக்காரர்களாகவும் நம்பிக்கை மோசடிப் பேர்வழிகளாக இருக்கும் இந்த தமிழ் முஸ்லிம் ,மலையக  கட்சித் தலைமைகளின் மீதான நம்பிக்கை இழப்பேயாகும். 

ஊழலுக்கும், இவர்களினதும், இவர்களது குடும்பங்கள்,  மற்றும் இவர்களுக்கு குண்டி கழுவும் ஒரு சிலரின் படோபகரமான வாழ்க்கை ,பொருளாதார மேல் நிலையாக்கம், அதிகார மமதை மட்டுமன்றி,  தமக்கு வாக்களித்த மக்களைக் கூட மதிக்கவும், நேசிக்கவும் , அவர்களது துயரங்களில் பங்கேடுக்கவும் முடியாத நிலையை, இம்மக்கள் பிரிவினரில் கணிசமான பிரிவினர் உணரத் தலைப்பட்டு விட்டனர். 

இதன் சமிக்ஞைகள்,  புலப்பாடுகள் தமது சொந்த ஆதரவுத் தளத்தில் தென்படத் தொடங்கியவுடன் ,  இத்தலைமைகள்   தன்னிலை மறந்து உளரத் தொடங்கி விட்டதைக் காண முடிகிறது. தேசிய மக்கள் சக்தியின்  மீதும் , அதன் வேட்பாளரான அனுர குமார மீதும் நியாயமான அரசியல் விமர்சனங்களை வைக்க வேண்டாம் என இங்கு சொல்ல வரவில்லை. இக்கட்டுரையாளருக்கும் , எங்களுக்கும் சில விமர்சனங்கள் உள்ளது. 

ஆதாரபூர்வமானதும், அரசியல், சமூக மதிப்பீடுகளுடன் கூடிய விமர்சனங்கள் வைக்கப்படல் வேண்டுமேயொழிய, இத் தலமைகளும், இவர்களது ஆதரவாளர்களும் இதுவரை வைத்துவரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, இவர்களது பதற்றமும் நடுக்கமும் நன்கு வெளித் தெரிகின்றன. 

—————————————–

”இது தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களின் அரசியலிலும்  பலம் பெற வேண்டும். இந்த மாற்ற உணர்வு வெளிப்பட வேண்டும். அதற்கான பலமான அடித்தளம் போடப்பட்டு விட்டதனை நாம் கண்முன்னே காண்கிறோம். இந்த சந்தர்ப்பவாத தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களிடையே உள்ள கட்சிகளின் தலைவர்களையும் , அதன் பிரதேச அரசியல் முகவர்களையும்   நோக்கி  கேள்வி கேற்கின்ற, அரசியல் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்ற , பரந்துபட்ட மக்கள்  நலனை முன்னிருத்திச் செயற்படுகின்ற போக்கு தொடங்கி விட்டதை காணும் போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களோ தமது ஏமாற்று அரசியல் முடிவுக்கு வரப் போவதையிட்டு கவலை கொண்டிருக்கின்றனர். 

அரசியல் நேர்மைக்கும் , மக்கள்  நேசிப்புக்கும் அடித்தளமான  உண்மையான  மாற்றத்திற்கான  பாதை தொடங்கி விட்டது. அது கோதபாய கும்பலை மட்டுமல்ல, அந்த அரசியலின் அனைத்து தொடர்ச்சியையும் வீழ்த்தி, புறமுதுகு காட்டி ஓடச் செய்யும். செம்டம்பர் 21, இலங்கை அரசியலில்  அனைத்து மக்களும்  இணைந்து நிற்கின்ற , அதன் பலமான தொடக்க நாளாக அமையும். இதில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களாகிய நாம்,  அனுபவங்களில் இருந்தும், இழப்புகளில் இருந்தும்,  பின்னடைவு அரசியல், சமூகப் பொருளாதார நிலைகளில் இருந்தும் பாடம் கற்று, நம் மகத்தான கடமையைச் செய்வோம். ”

————————————-

 நேற்று யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் பேசியுள்ள தோழர் அனுரவின் உரையில் ,   தென்னிலங்கையில் , தமிழ் அரசியல் கட்சிகளின் முடிவுகளையும் தமிழ் மக்களையும் பிரித்து பார்த்திருக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி  உள்ளதுடன்,  இதுவரை அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசுகளுக்கு வாக்களிக்காதீர்கள். நாங்கள் பேரம் பேச வரவில்லை. அனைத்து இனங்களும் ஒரு மேசையில் இருந்து பிரச்சனைகளை பேசி தீர்ப்போம். அதனை நாம் செய்வோம் என சொன்னது முக்கியமானது. அத்துடன் 

தமிழ் அரசியல் சமூக நீதியையும்  பல்லினங்களுடனான இணைந்து வாழ்வதனையும் பேசுவதில்லை. அத்துடன்  அத்தலைமைகள் தொடர்ந்து  ஐ தே க விற்கும் அதன் கிளை  கட்சிகளுக்கும் ஆதரவை கொடுக்கிறது. அல்லது பகிஸ்கரிப்பு , பொது வேட்பாளர் அரசியல் என சொல்கிறது.  இதற்கு வெளியுள்ள கட்சிகளும் ரணிலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ் அரசியல் இதில் இருந்து விடுபட வேண்டும். மக்களை  குறை கூறி பயன் இல்லை என்றார்.

முஸ்லிம்களிடம் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர , ஏமாற்றுக்காரர்களுக்கும், திருடர்களுக்கும், ஊழல்பெருச்சாளிகளுக்கும், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை விற்கும் அரசியல் தரகர்களின் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்கிறார். இதனைத்தான் மலையக மக்களிடமும் முன் வைக்கிறார்.

ஒப்பீட்டளவில், தமிழ், முஸ்லிம் மலையக கட்சித் தலைவர்களை விட, முஸ்லிம் பெயர் தாங்கிக் கட்சிகளின் தலைவர்களாக உள்ளவர்கள்தான், தேசிய மக்கள் சக்தியின் மீதும், அதன் வேட்பாளரான தோழர்  அனுர மீதும்  அதிகளவிலான போலித்தனமான, திரிபுவாத விமர்சனங்களை முன்வைக்கின்றனர். இவர்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கைகள் குறித்துப் பேச எந்த யோக்கியதையும் அற்றவர்கள். கொள்கை என்றால் கிலோ என்ன விலை என்பதே இன்றைய முஸ்லிம் அரசியலின் நிலையாக உள்ளது. அத்துடன்  தோழர் அனுர, மற்றும் அவர் சக பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இத்தலைமைகள்  குறித்துப் பேச இவர்களுக்கு எப்படி முடிகிறது? . இந்த ஏமாற்றுத் தலைமைகளினதும், பாரளுமன்ற உறுப்பினர்களினதும் , இக்கட்சிகளின் உள்ளூர் அரசியல் பிரமுகர்களினதும் வாழ்க்கையும், அரசியல் நேர்மையும் , கொள்கை உறுதியும் மக்களுடனான  நேசமும் ஒன்றா? . இல்லவே இல்லை என்பது மக்களுக்கு மட்டுமல்ல , இவர்களுக்கும் தெரிந்ததே. இருந்தும் மக்களின் தலையில் தொடர்ந்தும் மிளகாய் அரைக்கும் அரசியலில் இதனையும் செய்து விட்டுப் போகின்றனர்.

இதுவரை  ஜனாதிபதித் தேர்தலில், 5 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற ஒரு அரசியல் இயக்கம், இத்தேர்தலில் முதலிடத்தில் வைத்து பேசப்படும் சூழலில் உள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகளும் , சர்வதேச நிறுவனங்களின் அறிக்கைக்கைகளும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் தோழர்  அனுரவின் வெற்றியை எதிர்வு கூறுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இதன் அடிப்படை தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும் அரசியல் மாற்றமாகும். ஊழலுக்கும், வீண்விரயத்திற்கும், அதிகார துஸ்பிரயோகத்திற்கும் , பிரித்தாளும் அரசியலுக்கும் எதிரான அம்மக்களின் எதிர்ப்புணர்வே இத் தேர்வும் மனமாற்றமுமாகும். 

இது தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களின் அரசியலிலும்  பலம் பெற வேண்டும். இந்த மாற்ற உணர்வு வெளிப்பட வேண்டும். அதற்கான பலமான அடித்தளம் போடப்பட்டு விட்டதனை நாம் கண்முன்னே காண்கிறோம். இந்த சந்தர்ப்பவாத தமிழ் முஸ்லிம் ,மலையக மக்களிடையே உள்ள கட்சிகளின் தலைவர்களையும் , அதன் பிரதேச அரசியல் முகவர்களையும்   நோக்கி  கேள்வி கேற்கின்ற, அரசியல் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்ற , பரந்துபட்ட மக்கள்  நலனை முன்னிருத்திச் செயற்படுகின்ற போக்கு தொடங்கி விட்டதை காணும் போது நாம் மகிழ்ச்சியடைகிறோம், அவர்களோ தமது ஏமாற்று அரசியல் முடிவுக்கு வரப் போவதையிட்டு கவலை கொண்டிருக்கின்றனர். 

அரசியல் நேர்மைக்கும் , மக்கள்  நேசிப்புக்கும் அடித்தளமான  உண்மையான  மாற்றத்திற்கான  பாதை தொடங்கி விட்டது. அது கோதபாய கும்பலை மட்டுமல்ல, அந்த அரசியலின் அனைத்து தொடர்ச்சியையும் வீழ்த்தி, புறமுதுகு காட்டி ஓடச் செய்யும். செம்டம்பர் 21, இலங்கை அரசியலில்  அனைத்து மக்களும்  இணைந்து நிற்கின்ற , அதன் பலமான தொடக்க நாளாக அமையும். இதில் தமிழ், முஸ்லிம், மலையக மக்களாகிய நாம்,  அனுபவங்களில் இருந்தும், இழப்புகளில் இருந்தும்,  பின்னடைவு அரசியல், சமூகப் பொருளாதார நிலைகளில் இருந்தும் பாடம் கற்று, நம் மகத்தான கடமையைச் செய்வோம். 

000

இந்தப் பதிவு பற்றிய , உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்!

அரசியல், சமூக விடயங்கள் பற்றிய உங்கள் எழுத்துகளையும் பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பித் தரலாம்!

puthiyanooku@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *