ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலித ரங்கே பண்டாரவை தவிர்த்து ஏனைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் பொறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.
அண்மைய நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் பாலித ரங்கே பண்டார ஈடுபடவில்லை என்பதுடன், கட்சியின் விசேட பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து பாலித ரங்கே பண்டார நீக்கப்பட உள்ளதாகவும் அவர் எதிர்க்கட்சியில் இணைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் சில சிங்கள இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.