இலங்கையில் அதிகரித்து வரும் துன்பியல் நிகழ்வுகளில் முக்கியமானவைகளாக பின்வருவனவற்றை வரிசைப்படுத்த முடியும். அவையாவன:
பாடசாலை செல்லாத பிள்ளைகள்,
பாடசாலை இடைவிலகல்,
போதைக்கு அடிமையாகுதல்,
குற்றச்செயல்களில் ஈடுபடுதல்,
குடும்ப வன்முறை (Domestic Violence),
இளம் வயது விவாகரத்து (திருமணமாகி ஓரிரு வருடங்களில்),
தற்கொலை.
இவற்றுக்கான பரிகாரங்களாக பல செயற்றிட்டங்கள்; முன்மொழிவுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அவற்றை மீறிக்கொண்டு இச்சமூக பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
ஏனெனில், பிரச்சினையின் மூல காரணிக்கு (Root Cause) தீர்வும்; நிவாரணமும் வழங்காமல், அதன் கிளை அம்சங்களுக்கு மாற்றீடுகளைத் தேடுவதினால் குறித்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது.
இவை அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகின்றன. அது தான் வறுமை.
மேற்கூறப்பட்ட சமூகப் பிரச்சினைகள் வறுமையான குடும்பங்களில் அதிகமாக நிகழ்வதை ஆய்வுகள் நிரூபித்துள்ளதுடன், நாமும் அன்றாடம் கண்டு வருகின்றோம்.
இலங்கை வறுமையான நாடு அல்ல. இலங்கையில் காணப்படும் இயற்கை வளங்கள் ஒரு வளமான நாட்டுக்கு தேவையானதை விட அதிகம். இலங்கை மக்கள் வறியவர்களும் அல்ல. பிழையான அரசியலினால் வறுமைக்குள் தள்ளப்பட்ட மக்கள்.
1949 முதல் 1966 வரை அமெரிக்க டொளர் ஒன்றுக்கான இலங்கை ரூபா 4.77 மாறாமல் இருந்தது. 1977 இல் கூட ரூ. 16.00 இருந்த டொளர் ஜே.ஆர். ஜயவர்தனாவின் பிழையான பொருளாதார கொள்கையினால் 1990 ஆகும்போது 40.90 ரூபாவுக்கு அதிகரித்தது. தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களும் இப்பொருளாதார கொள்கையையே பின்பற்றினர். 2009 இல் டொளர் பெறுமதி 114.38 ரூபாவை தொட்டது.
‘எரியும் நெருப்புக்கு எண்ணெய் வார்ப்பது போல’ ஊழலும் நிதி மோசடியும் தலைவிரித்தாடின. 2021 இல் சீனி இறக்குமதியின்போது இடம்பெற்ற மோசடியினால் ரூபா 15.9 பில்லியன் இலங்கை அரசுக்கு (மக்களுக்கு) ஏற்பட்ட நட்டம் இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.
விளைவாக, நாடும் மக்களும் வறுமையின் பிடியில் சிக்கினர். இன்று, ஆரம்பித்தில் குறிப்பிட்ட சமூக நெருக்கடிகள் அதிகரிப்பதை அன்றாடம் கண்டும்; அனுபவித்தும் வருகின்றோம்.
ஆயின், இதற்கு பரிகாரம் என்ன? என்பதுவே நமக்கு முன்னாள் எழுந்து நிற்கும் வினாவாகும்.
ஊழலை ஒழித்தல்,
அரசியல்வாதிகளின் குடும்ப; கும்பல் அரசியலுக்கு முடிவு கட்டுதல்
என்ற விடையை நோக்கி மக்கள் நகர்கின்றனர்.
இதனை ரனில் – ராஜபக்ஷ – சஜித் கூட்டத்தினால் சாத்தியமாகாது, தவிர அவர்களிடம் அதற்கான தகுதியோ திராணியோ கிடையாது.
அவர்கள் ‘ஊழல் குட்டையில் ஊறிய திருட்டு மட்டைகள்’. குடும்ப; கும்பல் அரசியலில் உயிர்வாழ்பவர்கள்.
இந்த புள்ளியில் தான் இலங்கை மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தனர். அந்த மாற்றத்துக்கு மிகப் பொருத்தமான அணியாக தேசிய மக்கள் சக்தியை காண்கின்றனர்.
நாடு தழுவிய ரீதியில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து வளமான நாடொன்றில் அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்காக ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர்.
அந்த அணியின் தலைவராக தோழர் அனுர குமார திசாநாயக்க செயல்படுகின்றார். ஒரு கூட்டு முயற்சியின் விசையாக தனது பொறுப்பை நிறைவேற்றுகின்றார்.
அனுர வெல்ல ஊழல் அழியும்
ஊழல் அழிய பணம் சேரும்
பணம் சேர செல்வம் செழிக்கும்
செல்வம் செழிக்க நாடு உயரும்.
00000
அருன் ஹேமச்சந்திரா – திருகோணமலை