அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற ஸ்டார்லைன் விண்கலம் அடுத்த மாதம் 6ஆம் திகதி பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோருடன் ஸ்டார்லைன் விண்கலம் கடந்த ஜூன் 5ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.
ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் திகதி பூமிக்குத் திரும்ப முடியவில்லை.
இதன் காரணமாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் எனவும் யாரையும் ஏற்றாமல் ஸ்டார்லைன் விண்கலம் செப்டெம்பர் 6ஆம் திகதி மாலை 6.04க்கு பயணத்தை ஆரம்பித்து மறுநாள் 12.03க்கு பூமியை அடையும் எனவும் நாசா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.