2024 ஜனாதிபதி தேர்தலில் 12 சிங்கள மாவட்டங்களில் திசைகாட்டி முன்னிலை வகிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் களனி பள்ளத்தாக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது மேற்கூறிய அனுமானம் மிகையாகாது. சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களில் NPP முன்னிலை வகிக்கும் அதே வேளையில், தெற்கில் SJB போட்டியின்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. அது யதார்த்தமானால், தெற்கில் இம்முறை ரணிலின் நிலை மூன்றாம் நிலையாகும்.
அதன்படி இம்முறை தமிழ் அல்லது முஸ்லிம் வாக்குகள் தீர்க்கமான காரணியாக உள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவதற்கு பல தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டியுள்ளது. பொஹொட்டுவ வாக்காளர்களின் முழு ஆதரவையும் ரணில் பெற்றால்தான் , மூன்றாவது நிலையிலுள்ள SJBவின் மேற்கூறிய எண்ணிக்கையை ரணிலுக்கு தாண்ட முடியும்.ஆனால் யதார்த்தம் அதுவல்ல. நாமலின் வருகையால் மொட்டு வாக்காளர்களை ரணிலுக்கு ஆதரிக்க வற்புறுத்துவது , ரணிலை ஆதரிக்கும் அந்தந்த உள்ளுர் மொட்டு தலைவர்களின் கையில்தான் உள்ளது. அதன் யதார்த்தத்தைக் கண்டுபிடிப்பது எளிதல்ல.
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் 2022 இல் மக்கள் எதிர்த்த அரசியல் கலாச்சாரத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர், அதேவேளை அனுரகுமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) அறகலய மக்கள் எழுச்சியின் நோக்கத்மைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மக்கள் போராட்டத்தை (அறகலய/போராட்டம்) நசுக்கியதிலிருந்து, அரகலய மக்கள் எழுச்சியின் கருத்துக்கள் மற்றும் அபிலாஷைகளுடன் தொடர்புடைய பலர் NPP பக்கம் தங்களை ஈர்க்கத் இணைத்துக்கொண்டனர்.
குறைந்தளவு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட கட்சியாக இருந்த ஜனதா விமுக்தி பெரமுனா, இப்போது NPP தலைமையிலான ஒரு வலிமையான தேசிய அளவிலான அரசியல் சக்தியாகவும், பல்வேறு முற்போக்கு குழுக்கள் ஒன்றிணைந்து நாட்டின் ஊழல் அரசியல் கலாச்சாரத்திற்கு சவால் விடும் அரசியல் இயக்கமாகவும் தற்பொழுது உருவெடுத்துள்ளது.
இலங்கையின் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பது தொடக்கத்திலிருந்தே, குடிமக்களுடன் அரசியல்வாதிகள் தரகர்கள்-வாடிக்கையாளர் உறவின் மூலம் பராமரிக்கப்படும் ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. இவ் ஜனநாயகத்தின் ஒரு அம்சமாக ஊழல் இருந்து வருகின்றது. அரசியல்வாதிகள் தங்கள் வாக்குகளுக்கு ஈடாக வாக்காளர்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் குறிப்பிட்ட நன்மைகளை வழங்குகின்றனர்.
இத்தகைய அரசியல் அமைப்பில், பெரும்பாலான அரசியல் கட்சிகளும் அவற்றின் அரசியல்வாதிகளும் நாட்டுக்கு நன்மை பயக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்களை வழங்குவதை விட ஆதரவான பொருட்களை (மானியங்கள், வேலைகள், பதவி உயர்வுகள், வீடுகள் மற்றும் நிலங்களுக்கான பத்திரங்கள் போன்றவை) வழங்குவதில் கவனம் செலுத்துகின்றனர். இந்த அமைப்பின் கீழ், தங்கள் மாவட்டங்களில் ஒரு விரிவான ஆதரவாளர் வலையமைப்பைக் கட்டியெழுப்புகின்றனர். இது தேர்தலில் ஒரளவு தாக்கம் செலுத்தும்.
உண்மையில் வாக்காளர்கள், இப்படியான அரசியல்வாதிகளின் கையூட்டலுக்கும், போலிப் பிரச்சாரங்களுக்கும் இரையாகாமல் வாக்களிப்பதே , மாற்றத்திற்கான சாத்தியத்தினை பலப்படுத்தும். மக்கள் இம்முறை வாக்களிக்கும் போது, இதுவரையான வழிமுறையை கடைப்பிடிக்கக் கூடாது. அப்படித்தான் போனால் மீண்டும் திருடர்களின் கையில்தான் அதிகாரம் செல்லும்.
எனவே எமது மக்கள் , அரசியல்வாதிகளின் ஆட்டத்திற்கும் , ஏமாற்றுக்கும் பலியாகாமல் பின்னால் நிற்காமல் சுயமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
0000
00000
.