Sri Lanka
வாக்காளர்கள் ஏமாறக் கூடாது!
2024 ஜனாதிபதி தேர்தலில் 12 சிங்கள மாவட்டங்களில் திசைகாட்டி முன்னிலை வகிக்கிறது. கொழும்பு மாவட்டத்தில் களனி பள்ளத்தாக்கு முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கும் போது மேற்கூறிய அனுமானம் மிகையாகாது. சிங்கள பெரும்பான்மை மாவட்டங்களில் NPP முன்னிலை வகிக்கும் அதே வேளையில், தெற்கில் SJB போட்டியின்றி இரண்டாவது இடத்தில் உள்ளது. அது யதார்த்தமானால், தெற்கில் இம்முறை ரணிலின் நிலை மூன்றாம் நிலையாகும். அதன்படி இம்முறை தமிழ் அல்லது முஸ்லிம் வாக்குகள் தீர்க்கமான காரணியாக உள்ளது. இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில்…
ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!
சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற…
இனவாதமற்ற புதிய அரசாங்கம் வேண்டும்!
செப்டெம்பர் 21 ஆந் திகதி , புதிய அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்ள முடியும். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரதும் நம்பிக்கையை வென்றெடுத்த அரசாங்கமொன்றே எமக்குத்தேவை. பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் அரசாங்கமொன்றை அமைத்துக்கொள்வதில் பலனில்லை.தமிழ், முஸ்லீம், மலையக மக்கள் அனைவரதும் ஒத்துழைப்பு எமக்கு அவசியமாகும். பெரும்பாலானமக்கள் மத்தியில் இனவாதம் இல்லாவிட்டாலும் , ஒரு இனவாதத்தால் மற்றுமொரு இனவாதத்தை கட்டிவளர்க்கக்கூடிய அரசியலை முன்னெடுத்து வர அரசியல்வாதிகள் முயற்சிசெய்தார்கள். 2019 இல் கோட்டாபய வெற்றிபெற்றமைக்கான பிரதான காரணம் இனவாதமாகும்….
அமெரிக்க ஓபன்: 18 ஆண்டுகளின் பின் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
நோவக் ஜோகோவிச், 28 ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்ததையடுத்து, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் நான்காவது சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) அன்று நியோர்க்கின் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 25 வயதான அலெக்ஸி பாபிரின் நடப்பு சாம்பியனை 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட்களில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரமும் 19 நிமிடங்களும் நீடித்தது. இதன் விளைவாக 24…
சூரியனை விட அதிக பிரகாசமான குவாசர்ஸ்: சுற்றிவர நட்சத்திரங்கள் நடுவில் கருந்துளை
விண்வெளியில் அப்படி என்னதான் நடக்கின்றது என்பதை தொடர்ந்தும் வானியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு ஒளிவீசும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (ESO) VLT எனும் தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். நட்சத்திரங்கள் சூழ நடுவில் கருந்துளையைக் கொண்டுள்ள இதனை குவாசர்ஸ் என அழைக்கின்றனர். இதன் நடுவிலுள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்படுகின்றது. கருந்துளைகளை காற்று மற்றும் தூசிகள் அண்மிக்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே அதன் அதிகபட்ச ஒளிக்கு காரணம்….
ஸ்டார்லைன் விண்கலம் செப்டெம்பர் 6ஆம் திகதி பூமிக்கும் திரும்புகிறது: நாசா அறிவிப்பு
அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற ஸ்டார்லைன் விண்கலம் அடுத்த மாதம் 6ஆம் திகதி பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோருடன் ஸ்டார்லைன் விண்கலம் கடந்த ஜூன் 5ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் திகதி பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்…
அனுர வெற்றிபெற்றால் யார் பிரதமர்?: அவரது அரசாங்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்
இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுரகுமார திஸாநாயக்க இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் பின்புலத்தில் அவர் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில்,…