ஜனாதிபதித் தேர்தலும் இந்தியாவின் அவதானிப்பும்: அஜித் தோவலின் வருகை டில்லியின் மாற்று வியூகமா?

ஜனாதிபதித் தேர்தல் களம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கொழும்பு வருகை பல்வேறு சந்தேகங்களையும், இலங்கை தொடர்பான விவாகாரங்களில் இந்தியா புதிய வியூகங்களை வகுக்கவுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இந்தியா, மொரீஷியஸ், மாலத்தீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தீவில் அடுத்து ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்தின் கீழ் தேசிய…

Read More

ரணில் கட்சியின் முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க போகிறாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலித ரங்கே பண்டாரவை தவிர்த்து ஏனைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் பொறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் பாலித ரங்கே பண்டார ஈடுபடவில்லை என்பதுடன், கட்சியின் விசேட பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில்…

Read More

கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாக நீக்கப்பட்டாரா பாலித?: அவரே கூறிய பதில்

கட்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லையெனவும் , தனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ அருண, மவ்பிம, மற்றும் லங்காதீப போன்று பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்…

Read More

எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பேன்: ஜனகரத்நாயக்க உறுதி

தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதற்கே முன்னுரியளிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக்…

Read More