ஸ்டார்லைன் விண்கலம் செப்டெம்பர் 6ஆம் திகதி பூமிக்கும் திரும்புகிறது: நாசா அறிவிப்பு

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற ஸ்டார்லைன் விண்கலம் அடுத்த மாதம் 6ஆம் திகதி பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோருடன் ஸ்டார்லைன் விண்கலம் கடந்த ஜூன் 5ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் திகதி பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்…

Read More

எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பேன்: ஜனகரத்நாயக்க உறுதி

தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதற்கே முன்னுரியளிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக்…

Read More

இலங்கை தீவின் பொருளாதாரத்தை சிதைத்து விட்ட 16 மோசடிகள்

நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் மத்திய வங்கியில் நடைபெற்ற பிணை முறி மோசடியில் திறைசேரிக்கு ரூபா 19.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டது நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் பாராளமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட  வாகன இறக்குமதிக்கான வரி சலுகை மோசடியால் பொது நிதிக்கு  ரூபா 7 பில்லியன் இழப்பு ஏற்பட்டது கோத்தபாயா ராஜபக்சேவின் வரி சீரமைப்பு மோசடிகளால் திறைசேரியின் வருமானம் ரூபா 600 பில்லியனால் வீழ்ச்சியடைந்தது கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலிருந்த போது நடந்த சீனி இறக்குமதி வரி மோசடியில்…

Read More

கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாக நீக்கப்பட்டாரா பாலித?: அவரே கூறிய பதில்

கட்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லையெனவும் , தனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ அருண, மவ்பிம, மற்றும் லங்காதீப போன்று பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்…

Read More

ஜனாதிபதி தேர்தல் 2024: தென்னிலங்கை ஜேவிபி / என்பிபி ஆதரவு அலையின் பின்னணியில் உள்ள சமூக உளவியல் காரணிகள்!

சிங்கள பெரும்போக்கு ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கருத்துக்களை பதிவு செய்யும் அரசியல் விமர்சகர்கள் அனைவரும் பொதுவாக பயன்படுத்தும் ஒரு சொல் ‘தீரணாத்மக’ என்பது (தமிழில் அதனை ‘இரண்டில் ஒன்று முடிவாகப் போகும் தருணம்’ என்று சொல்லலாம்). இன்று இலங்கை அதன் சுதந்திரத்திற்கு பிற்பட்ட 76 வருட கால வரலாற்றில் மிக மிக நிர்ணயமான ஒரு கட்டத்தில் வந்து நின்றிருக்கிறது என்ற அபிப்பிராயம் பொதுவாக அனைத்துத் தரப்புக்கள் மத்தியிலும் நிலவி வருகிறது. முன்னர் இடம்பெற்ற…

Read More

ஜனாதிபதித் தேர்தலும் இந்தியாவின் அவதானிப்பும்: அஜித் தோவலின் வருகை டில்லியின் மாற்று வியூகமா?

ஜனாதிபதித் தேர்தல் களம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கொழும்பு வருகை பல்வேறு சந்தேகங்களையும், இலங்கை தொடர்பான விவாகாரங்களில் இந்தியா புதிய வியூகங்களை வகுக்கவுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இந்தியா, மொரீஷியஸ், மாலத்தீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தீவில் அடுத்து ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்தின் கீழ் தேசிய…

Read More

அனுர வெற்றிபெற்றால் யார் பிரதமர்?: அவரது அரசாங்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுரகுமார திஸாநாயக்க இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் பின்புலத்தில் அவர் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில்,…

Read More

ரணிலை ஏன் வீழ்த்த வேண்டும்?

புருஜோத்தமன் தங்கமயில் கட்டுரையாளர், தமிழ் அரசியல், மற்றும் இலங்கை விவகாரத்தில் ஆழமான கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதி வருபவர். இங்கு அவருடைய கட்டுரை பதிவு பெறுகிறது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான் என்பதை உணராமல் நாட்டு மக்களின் தலையில் மிளகாய் அரைக்கும் வேலைகளில் ரணில் விக்ரமசிங்கவும் அவரது (புதுக்) கூட்டாளிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக ரணில் எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராகிவிட்டார். ஏனெனில், அவருக்கு தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் இழப்பதற்கு ஏதுமில்லை. நாட்டிலேயே அதிகூடிய விருப்பு…

Read More