ஜேவிபி/ என். பி. பி இன் பிரதேச சபை பிரதிநிதித்துவம்
தமிழ் தேசிய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இலங்கையில் பிரதிநிதித்துவ (பாராளுமன்ற) அரசியல் முறைமை அறிமுகப்படுத்திய நாள் முதல் இனத்துவ பிரதிநிதித்துவ அரசியல் வலுப்பெறலாயிற்று. கொழும்பை மையமாகக் கொண்டு; உருவாக்கப்பட்ட தேசியக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்காமையினால் , சிறுபான்மை அரசியல் தலைமைகள் சிறுபான்மை மக்களின் தனித்துவத்தை முன்னிறுத்தி தனித்துவமாக செயற்பட ஆரம்பித்தன. தமக்கென தனித்துவமான கட்சிகளை உருவாக்கிக் கொண்டன. (தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் என அனைத்துப் பிரிவிலும் இந்தப் போக்கு…

