puthiyanookku

அமெரிக்க ஓபன்: 18 ஆண்டுகளின் பின் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி

நோவக் ஜோகோவிச், 28 ஆம் நிலை வீரரான அவுஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரினிடம் தோல்வியடைந்ததையடுத்து, 18 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக அமெரிக்க ஓபன் நான்காவது சுற்றுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (30) அன்று நியோர்க்கின் ஆர்தர் ஆஷ் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் 25 வயதான அலெக்ஸி பாபிரின் நடப்பு சாம்பியனை 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட்களில் தோற்கடித்தார். இந்த ஆட்டம் 3 மணி நேரமும் 19 நிமிடங்களும் நீடித்தது. இதன் விளைவாக 24…

Read More

உணவு, நீர் இன்றி தவிக்கும் பலஸ்தீனியர்கள்: ஜெனினை முற்றுகையிட்டது இஸ்ரேல்

மத்திய காசாவின் நுசிராட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பல தசாப்தங்களாக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மிகத் தீவிரமான இராணுவத் தாக்குதல் தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியப் படைகள் ஜெனின் நகரை முற்றுகையிட்டுள்ள நிலையில் பலஸ்தீனிய குடியிருப்பாளர்கள் உணவு, நீர் மற்றும் மின்சாரம் இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய வசதிகள் எதுவும் இல்லையென கூறப்படுகின்றது. இஸ்ரேலிய இராணுவம் அதன் தாக்குதலின் நான்காவது நாளில் முற்றுகையிடப்பட்ட அகதிகள் முகாமில் உள்ள…

Read More

சூரியனை விட அதிக பிரகாசமான குவாசர்ஸ்: சுற்றிவர நட்சத்திரங்கள் நடுவில் கருந்துளை

விண்வெளியில் அப்படி என்னதான் நடக்கின்றது என்பதை தொடர்ந்தும் வானியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சூரியனை விட 500 ட்ரில்லியன் மடங்கு ஒளிவீசும் பொருளை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (ESO) VLT எனும் தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளனர். நட்சத்திரங்கள் சூழ நடுவில் கருந்துளையைக் கொண்டுள்ள இதனை குவாசர்ஸ் என அழைக்கின்றனர். இதன் நடுவிலுள்ள கருந்துளைகளால் குவாசர்ஸ் இயக்கப்படுகின்றது. கருந்துளைகளை காற்று மற்றும் தூசிகள் அண்மிக்கும்போது மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே அதன் அதிகபட்ச ஒளிக்கு காரணம்….

Read More

ஸ்டார்லைன் விண்கலம் செப்டெம்பர் 6ஆம் திகதி பூமிக்கும் திரும்புகிறது: நாசா அறிவிப்பு

அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸை ஏற்றிச்சென்ற ஸ்டார்லைன் விண்கலம் அடுத்த மாதம் 6ஆம் திகதி பூமிக்குத் திரும்பவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் ஆகியோருடன் ஸ்டார்லைன் விண்கலம் கடந்த ஜூன் 5ஆம் திகதி சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறின் காரணமாக அவர்களால் திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் திகதி பூமிக்குத் திரும்ப முடியவில்லை. இதன் காரணமாக அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் இவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள்…

Read More

அனுர வெற்றிபெற்றால் யார் பிரதமர்?: அவரது அரசாங்கம் குறித்து வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெற உள்ளது. பிரதான வேட்பாளர்கள் தமது பிரச்சார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகின்றனர். அனுரகுமார திஸாநாயக்க இத்தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகிவரும் பின்புலத்தில் அவர் வெற்றிபெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையில்லாது எவ்வாறு ஓர் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியும் என பல்வேறு கேள்விகள் சமூக மட்டத்தில் எழுந்துள்ளன. இந்த நிலையில்,…

Read More

ஜனாதிபதித் தேர்தலும் இந்தியாவின் அவதானிப்பும்: அஜித் தோவலின் வருகை டில்லியின் மாற்று வியூகமா?

ஜனாதிபதித் தேர்தல் களம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் கொழும்பு வருகை பல்வேறு சந்தேகங்களையும், இலங்கை தொடர்பான விவாகாரங்களில் இந்தியா புதிய வியூகங்களை வகுக்கவுள்ளதா என்ற கேள்விகளையும் எழுப்பியுள்ளன. இந்தியா, மொரீஷியஸ், மாலத்தீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளை உறுப்பு நாடுகளாகக் கொண்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக அஜித் தோவல் இலங்கைக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கைத் தீவில் அடுத்து ஆட்சியமைக்கவுள்ள அரசாங்கத்தின் கீழ் தேசிய…

Read More

ரணில் கட்சியின் முக்கிய புள்ளி: எதிர்க்கட்சிக்கு ஆதரவளிக்க போகிறாரா?

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலித ரங்கே பண்டாரவை தவிர்த்து ஏனைய அதிகாரிகளுக்கு ஜனாதிபதித் தேர்தல் பொறுப்புக்களை ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார். அண்மைய நாட்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் பாலித ரங்கே பண்டார ஈடுபடவில்லை என்பதுடன், கட்சியின் விசேட பொதுக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில்…

Read More

கட்சியிலிருந்து உத்தியோகப்பூர்வமாக நீக்கப்பட்டாரா பாலித?: அவரே கூறிய பதில்

கட்சியிலிருந்து தான் நீக்கப்படவில்லையெனவும் , தனக்கு எதுவித உத்தியோகப்பூர்வ அறிவிப்பும் விடுக்கப்படவில்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். பாலித ரங்கே பண்டார ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், “ அருண, மவ்பிம, மற்றும் லங்காதீப போன்று பல பத்திரிகைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர்…

Read More

எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பேன்: ஜனகரத்நாயக்க உறுதி

தான் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டால் எரிபொருள் விலையை 150 ரூபாவாக குறைப்பதற்கே முன்னுரியளிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளரும், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க உறுதியளித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த உறுதியை அளித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியானது நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடியாகும் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் இலங்கை பெட்ரோலியக்…

Read More